நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன்.மேற்கூறிய நகை என் சொந்த நகையாகும். இந்த நகை யாருக்கும் சொந்தமோ அல்லது பாத்தியமோ கிடையாது.எனது நேர்மையான தேவைகளுக்கும்,எனது குடும்ப சூழ்நிலை நிமித்தம் காரணமாக தங்களிடம் எனக்கு சொந்தமான நகையை அடமானம் காட்டி தங்களிடம் நகை கடன் பெற்றுள்ளேன்.
மாதா மாதம் வட்டியை அந்த மாத இறுதிக்குள் செலுத்தி விடுவேன்.மாத வட்டி செலுத்த தாமதமானால் அதற்கான தாமதமான வட்டியுடன் சேர்த்து செலுத்துவேன்.
அந்த நகை திருட்டோ அல்லது வில்லங்கமோ இருந்தால் அதற்க்கு முழுப்பொறுப்பும் நான் ஏற்கிறேன்.அதன் சம்மந்தமான லாப நஷ்டங்களுக்கு நிர்வாகம் பொருப்பல்ல என்பதை அறிந்து கொண்டேன்.
கடன் தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள்ளாக திருப்ப இயலாது.
என் மீது எந்த ஒரு திவாலோ நோட்டீஸ்,கடன் தீர்க்க தகுதியற்றவர் என்ற புகார் மற்றும் எந்த ஒரு நீதி மன்ற வலக்கு எதுவும் இல்லை என்று உறுதியளிக்கின்றேன்.
நிர்வாகத்தில் நான் பெற்ற கடன் தொகைக்கு ஈடாக வைத்துள்ள நகைகளை நிர்வாகத்திற்க்கு தேவைப்பட்டால் மறுஈடு வைத்து பணம் வாங்கவோ அல்லது எழுத்து பூர்வமாக ஈடாக எழுதிக்கொடுக்கவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.
நிர்வாகத்திற்க்கு என் நகை கடன் தொகைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்மீதும் எனது இதரசகல சொத்துக்களும் அதற்கு உரிய ஜாமீனாகும் முழு பொறுப்பு ஏற்று அதை நிவர்த்தி செய்வேன்.
மேலே குறிப்பிட்டுள்ள மீட்பு காலத்திற்குள் நகையை திருப்பிக் கொள்வேன்.தவறும் பட்சத்தில் நிர்வாகத்த்னர் எனது அடகு வைத்த நகையை ஏலத்திற்கு விட எனக்கு ஆட்சியபனையம் இல்லை.நிர்வாகத்தினர் ஏலத்திற்கோ அல்லது கை விலைக்கோ விற்பனை செய்த பிறகு அவர்களுடைய அசல்,வட்டி செலவு கணக்குகளுக்கு போதுமானதாக இல்லையெனில் மீதமுள்ள தொகையை நிர்வாகத்திற்க்கு உடனே செலுத்தி விடுவேன்.அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் என் மீதும் எனது இதர சகல சொத்துக்கள் மீதும் சட்டரீதியாக எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கட்டுப்படுவேன் என உறுதியளிக்கிறேன்.
நிர்வாகத்தினர் நகையை ஏலத்திலோ அல்லது கைவிலைக்கோ விற்றபிறகு நகையின் மீது எந்தவித உரிமையும் கோரி வரமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.ஈடுவைக்கும் நகைகளின் மதிப்பு காலபோக்கில் குறையும் பட்சத்தில் அவ்விதம் குறையும் தொகையை செலுத்திவிடவும் சமதிக்கின்றேன்.
நான் தெறிவித்த விலாசத்திலிருந்து வேறு விலாசத்திற்க்கு மாறினாலோ,தொலைபேசி எண்ணை மாற்றினாலோ தாங்கள் நிறுவனத்திற்க்கு எழுத்து மூலமாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தங்களுக்கு தெரிவிப்பேன்.இல்லையெனில் எனக்கு மேற்படி விலாசத்திற்க்கு கடித மூலம் தெர்வித்தாலும்,கடிதம் திரும்ப வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.
நகையை திருப்புவதற்க்கு 12 மணி நேரத்திற்கு முன்பு பணம் செலுத்தி மாலை 3 மணிக்கு மேல் நகை வாபஸ் தரப்படும்.குறிப்பாக ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகையை வாபஸ் தரப்படமாட்டாது.
நிர்வாகத்தின் வட்டி விகிதம் அபராதவட்டி விகிதம் பிற கட்டணங்கள் பற்றி முழுவதும் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு தெரிந்து கொண்டேன்.நிர்வாகத்திற்க்கு தேவை ஏற்ப்பட்டால் இடையில் வட்டி விகிதத்தை மாற்றவும் சம்மதிக்கிறேன்.மேலே குறிப்பிட்ட அனைத்து விபரங்களுக்கும் முழுசம்மதம் தெரிந்நு நகைக்கடன் பெற்றுள்ளேன்.
இப்படிக்கு
இதில் கண்ட அசல் ரூ......................... ............மற்றும் வட்டி ரூ............................
செலுத்தி நகையை சரிபார்த்து நல்லநிலையில் பெற்றுக்கொண்டேண்.
கையெழுத்து....................................................